Breaking News

மது, புகை பழக்கத்தை நிறுத்தினால் இதயநோயை தடுக்கலாம்

Image result for drinking alcohol and smoking
இன்றைய அவசர யுகத்தில் அரக்கபரக்க வீட்டை விட்டு வெளியில் செல்பவர்கள் கிடைப்பதை உண்டு விட்டு அலுவலகத்திற்கு செல்வதில் குறியாக இருக்கின்றனர். சரிவிகித உணவு உட்கொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இதனால் சிறுவயதிலேயே ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. மதுப் பழக்கம் இதயத்திற்கு எதிரியாகும்.
இது இதயத்தின் தசைகளை வலுவிலக்கச் செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. எனவே மதுவுக்கு அடிமையானவர்கள் படிப்படியாக குறைத்து பின்னர், அதனை முற்றிலும் விட்டுவிடுவது இதயத்திற்கு நன்மை தரும். புகைப்பழக்கம் கொண்டவர்களின் வாழ்க்கை 15 முதல் 25 ஆண்டுகள் வரை குறைந்து விடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனவே புகைப்பதை நிறுத்தினால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.
சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். யோகா, தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம்.
கெட்ட கொழுப்பானது ரத்த நாளங்களில் உட்புகுந்து இதயத்திற்கு ரத்தம் செல்வதை தடுக்கும். எனவே அதிகம் குண்டாகாமல், உடலில் கொழுப்பு சேரவிடாமல் பார்த்துக்கொள்வது இதயத்திற்கு இதம் தரும். நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு சத்து போன்றவற்றை பரிசோதனை செய்து, அதற்கு ஏற்றார்போல் சிகிச்சை பெற வேண்டும். மேற்கண்ட தகவலை கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர் கல்யாணராமன் தெரிவித்தார்.

No comments