Breaking News

வெள்ளரிக்காய் நீர் குடித்த சில மணி நேரத்தில் உடலில் நடக்கும் அற்புத மாற்றம்..!

Image result for cucumber water
வெள்ளரிக்காய் உடல் வறட்சியைத் தீர்த்து சருமத்திற்கு புத்துணர்ச்சி தருவதுடன் சருமத் தொல்லைகளையும் நீக்கும்.
வெள்ளரிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
வெள்ளரிக்காயில் உள்ள சிலிக்கா எனும் கனியுப்பு இனைக்கும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.
இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் மக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் சி செறிந்துள்ளது.
இதில் உள்ள அதிகப்படியான திரவத்தினால் திசுக்களைநீர் தன்மையாக வைப்பதற்கும், நீர் இழப்பை தடுப்பதற்கும் உதவுகின்றது.
வெள்ளரிக்காயில் உள்ள ascorbic acid, caffeic acid சருமத்தில் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தாமல் தடுக்கும்
கண்ணைச் சுற்றியுள்ள வீக்கம், கருவளையம் நீக்க வல்லது.
வெள்ளரிக்காயில் தயாரிக்கப்படும் நீர் சருமத் தொல்லைகளை இலகுவாக குணப்படுத்தும்.
வெள்ளரிக்காய் நீர் தயாரிக்கும் முறை
வெள்ளரிக்காயை நீரினால் கழுவி அழுக்குகளை அகற்றிய பின்பு தோலைச் சீவவும்.
வெள்ளரிக்காயை நடுவாக வெட்டி உள்ளிருக்கும் விதைப் பகுதிகளை அகற்றவும்.
பின்பு சிறு துண்டுகளாக வெட்டி நீர் உள்ள பாத்திரத்தில் போட்டு அதன் மேல் ஜஸ் கட்டிகளை போடுவதனால் துண்டுகள் மேலே வராமல் தடுக்க முடியும்.
சில மணி நேரங்களின் பின்னர் இதனை குடிப்பதனால் ஆரோக்கியம் மேம்படும்.

No comments