கோழியைத் திருடச் சென்ற திருடனின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறிய நாய்..!!
கோழி திருடச் சென்ற திருடர் ஒருவர் வீட்டு நாயால் கடியுண்டு படுகாயமடைந்த சம்பவம் ஒன்று நேற்று முந்தினம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் குறித்த பிரதேசத்தில் பரபரப்பு ஏற்படுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி கொஸ்கஸ்பிட்டிய என்ற இடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
ம்பவ தினத்தன்று, குறித்த பகுதியில் மழை பெய்து ஓய்ந்திருந்ததாகவும் இதன்போது இலேசான மின்னலுடன் இடி இடித்துக்கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரவு எட்டு மணி தாண்டிய நேரத்தில் குறித்த வீட்டின் பின் புறத்திலுள்ள கோழிக்கூட்டில் கோழிகளின் சத்தம் கேட்டுள்ளது. இதே நேரம் பாரிய மின்னல் வெளிச்சத்துடன் பட படவென இடிமுழக்கச் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தகரங்கள் விழும் சத்தமும் பெரிதாகக் கேட்டுள்ளது.
பின்னர் வீட்டில் நின்ற நாய் குரைத்தபடி பின்பக்கம் சென்றதுடன் சற்று நேரத்தில் அம்மே அம்மே என்று ஆண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது, நபர் ஒருவர் கீழே விழுந்து கிடக்கையில் அவர் அணிந்திருந்த காற்சட்டையின் முன்பக்கம் கவ்விப் பிடித்திருந்த நாய், அவர் மீது பாய்ந்து பாய்ந்து பிறாண்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வீட்டுக் காரரின் சத்தத்தைக் கேட்ட நாய் அவரை விடுவித்ததுடன் குறித்த நபர், தனது காற்சட்டையின் முன்பக்கத்தைப் பொத்திக்கொண்டு குடல்தெறிக்க ஓடியுள்ளார். அவர் ஓடும்போது நாய் கடித்ததால் ஏற்பட்ட இரத்தக் காயங்கள் காணப்பட்டதாக வீட்டு உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து வீட்டு உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில், ”குறித்த திருடன் கோழி திருடுவதற்காய் கோழிக்கூட்டில் கை வைக்க முயன்றபோது இடி இடித்துள்ளது. திடீரென்று பாரிய சத்தத்துடன் முழங்கிய இந்த இடியினால் அவர் அதிர்ச்சியுற்று ஓட முயன்றுள்ளார்.
இதன்போது ஈர நிலம் வழுக்கியதால் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த தகரங்களின்மேல் விடுந்துள்ளார். இந்த சத்தத்தைக் கேட்ட எமது வளர்ப்பு நாய் அவரைக் கடித்துள்ளது. அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்துள்ளதுடன் உடனடியாக அவர் தப்பி ஓடிவிட்டார்.” என்றார்.
இதேவேளை இதேபோன்றதொரு கோழித் திருட்டுச் சம்பவம் அண்மைய நாள் ஒன்றில் தென்னிலங்கையில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments