Breaking News

நாளைய தினம் விசேட புகையிரத சேவை..

Image result for Sri Lanka Railways S12 Mcg 925

புது வருட பண்டிகை காலத்தில் பிரயாணிகளுக்கு வசதிக்காக நாளைய தினம் 12 விசேட புகையிரதங்கள் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, இரவு 7.20 க்கு கொழும்பு தொடக்கம் பண்டாரவளை நோக்கி குளிரூட்டப்பட்ட புகையிரதம் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை இரவு 10 மணிக்கு கொழும்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலும், மாலை 6.50 மணிக்கு கொழும்பு கோட்டை தொடக்கம் காலி வரையில் இரு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டை தொடக்கம் மஹவ வரை இரு விசேட புகையிரதங்களும், மரதானை தொடக்கம் காலி மற்றும் மாத்தறை வரை 4 விசேட புகையிரதங்களும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments