பன்வில பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றிய ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி
கண்டி – பன்வில பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.
சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் பதவி நியமனங்களுக்கான வாக்கெடுப்பு இன்று முற்பகல் இடம்பெற்றது.
தவிசாளர் பதவிக்காக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் ஏ. செனவிரட்னவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், அநுர சாந்தவும் போட்டியிட்டனர்.
16 உறுப்பினர்களைக் கொண்ட பன்விலை பிரதேச சபையில், குறித்த இருவருக்கும் தலா 8 வாக்குகள் வீதம் கிடைத்தன.
இதையடுத்து, இடம்பெற்ற குழுக்கள் முறைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஏ. செனவிரட்ன தவிசாளராக தெரிவானார்.
இதேவேளை, பிரதித் தவிசாளர் பதவிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முத்து சிவகுமாரும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் சுந்தரம் விஜேந்திரனும் போட்டியினர்.
இதற்கான வாக்கெடுப்பில் சுந்தரம் விஜேந்திரன் 7 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள, 9 வாக்குகளைப் பெற்ற முத்து சிவக்குமார் பிரதித் தவிசாளராக தெரிவானார் என அங்குள்ள எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
No comments