பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு - குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் பலி
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் பலியானதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை அடுத்து, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பதில் தாக்குதல்களை இந்திய தரப்பினரும் மேற்கொள்ளக் கூடும் எனவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
THANKS Hiru News..
No comments