இரண்டாவது முறையாக சீனாவின் ஜனாதிபதி
இரண்டாவது முறையாக சீ ஜின்பிங்கை சீனாவின் ஜனாதிபதியாக தொழில்பட சீன நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சீன தேசிய மக்கள் காங்கிரஸ் ஏகமனதாக அனுமதியை வழங்கியுள்ளது.
அதேவேளை, வங் குயீஷனை பிரதி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதி ஜனாதிபதிக்கு ஒரே ஒரு வாக்கு மட்டும் எதிராக பதிவாகியுள்ளது.
பிரதி ஜனாதிபதி முன்னர் சீனாவின் ஊழல் விசாரணை குழுவின் தலைவராக செயல்பட்டவர்.
இது தவிர, அவர் சீனாவின் பல உயர் பதவிகளை வகித்தவர் என்பதுடன், 2008 ஆம் ஆண்டு சீன ஒலிம்பிக்ஸ் குழுவில் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
THANKS Hiru News..
No comments