Breaking News

சிரியாவின் மக்களை குறிவைத்து வாநூர்தி தாக்குதல்கள்

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பாரிய தாக்குதல்கள் இடம்பெற்று வரும் சிரியாவின் கிழக்கு கௌவ்டாவை விட்டு வெளியேறும் மக்களை குறிவைத்து வாநூர்தி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தலைநகர் டமஸ்கசில் உள்ள ஊடக நிலையம் அறிவித்துள்ளது.
வாநூர்தி தாக்குதல் காரணமாக காயமடைந்தவர்களை சிரிய செம்படை அமைப்பு தம்மால் இயன்ற மருத்துவ உதவியினை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேறும் மக்கள் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட எண்ணிக்கைகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விடயங்கள் தொடர்பான இணைப்பாளர் செயலகம், கடந்த சில நாட்களுக்குள் 12 மக்கள் வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஆனல், ஐக்கிய நாடுகளின் சிரியாவிற்கான தூதுவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக வாநூர்தி தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதனால், உண்மையான எண்ணிக்கையினை மதிப்பிட முடியாமல் உள்ளதாக ஊடக நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

THANKS Hiru News..

No comments