சீன பிரஜையொருவர் கட்டுநாயக்கவில் சிக்கினார் (படங்கள்)
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து கொண்டு செல்ல முற்பட்ட வௌிநாட்டு நாணய தாள்கள் மற்றும் மாணிக்கக்கல் தொகையுடன் சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்க்கொழும்பு பிரதேசத்தில் சுற்றுலா விடுதியொன்றை நடாத்திச் செல்பவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
நேற்று பிற்பகல் துபாய் நோக்கி பயணிக்க வந்த அவரின் பயணப்பொதியை சோதனையிட்ட போது குறித்த பணத்தொகை மற்றும் மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 40 இலட்சத்து 23 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks - http://www.hirunews.lk/tamil
No comments