கோடைக்கு ஏற்ற பழங்கள்; ஐஸ் க்ரீம் ஃபுரூட் சேலட்...!
கோடைக்காலத்தில் எந்த அளவுக்கு காய்கறிகளையும், பழங்களையும் அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலிற்கு நல்லது. கோடைக்காலத்தில் உடலிற்கு நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறி மற்றும் பழங்களில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது.
ஐஸ் க்ரீம் ஃபுரூட் சேலட் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை திராட்சை - 250 கிராம்
பப்பாளி பழம் - 1
ஆப்பிள் - 2
தர்பூசணி - பாதி பழம் (சிறியது)
வாழைப்பழம் - 2
உப்பு சிறிதளவு - சுவைக்காக
செய்முறை:
பழங்கள் பிரெஷாக இருந்தால் நல்ல இருக்கும். 5.பழங்களை நல்ல பொடியாக அரிந்து பிரிட்ஜில் வைக்க வேண்டும். பிறகு பொடியாக அரிந்து வைத்துள்ள பழங்களை ஒன்றாக கலந்து மூன்று மேசை கரண்டி அளவு போட்டு மேலே மூன்று அல்லது இரண்டு பிளேவர் ஐஸ்கிரீமை வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சாப்பிடும் நேரத்தில் கண்டெண்ஸ்ட் மில்க் கலந்து சாப்பிடலாம். ஒவ்வொரு கப்பிலும் ஒரு முந்திரி, சிறிது பாதம் தூவ வேண்டும். ஐஸ்கிரீம் ஸ்ட்ரபெர்ரி, சாக்லேட் பிளேவர் என்று நமக்கு விருப்பமான முறையில் தயாரிக்கலாம். இது எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும்.
குறிப்பு:
சாப்பிடும் நேரத்தில் பிரெஷாக கஸ்டடில் கண்டெண்ஸ்ட் மில்க் கலந்து கொள்ளலாம். பழங்களை முதலிலேயே கட் செய்து வைத்துவிட்டால் கருத்து போய்விடும். ஆகையால் பழங்களை சாப்பிடும் போது கட் செய்ய வேண்டும். இதில் தேன் கலந்தும் சாப்பிடலாம்.
பழங்கள் பயன்கள்:
பப்பாளி; பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டாக பப்பாளி சாப்பிடுவது நல்லது. மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.
வாழைப்பழம்: மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
திராட்சை: திராட்சையில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் காணப்படுகிறது. சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும்
தர்பூசணி: மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான். 92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. மேலும் இந்தப் பழம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் சி, பொட்டாசியம் ஆகியவை.
ஆப்பிள்: ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே. ஆப்பிளில் உள்ள விட்டமின் பெருங்குடல் புற்று நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!
No comments