விசேட அதிதியாக ஜனாதிபதி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று இடம்பெற்ற அந்நாட்டு குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அதிதியாக கலந்துகொண்டார்.
1940 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட லாஹுர் உடன்பாட்டுக்கு அமைய பாகிஸ்தான் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
இன்று இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வில், பிரதமர் ஷாஹிட் ககான் அபாஸி மற்றும் அந்நாட்டு படைப் பிரதானிகளும் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாகிஸ்தான் பிரதமர் வரவேற்றுள்ளார்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹுஸைன் நன்றி தெரிவித்தார் என பாகிஸ்தான் டோன் ஊடகம் தெரிவித்துள்ளது.
அணிவகுப்பு மரியாதைக்காக, துருக்கி ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் முதலான நாடுகளின் படைகளின் இராணுவ உபகரணங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Taken From - http://www.hirunews.lk/tamil/
No comments