தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகன்!!
தாயின் இறுதி கிரியை முடிந்த நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 27 ஆம் திகதி இந்த மரணம் இடம்பெற்றிருந்த நிலையில், பிரேத பரிசோதனையில் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று சடலம் அடக்கம் செய்யப்பட்டிருந்து.
இறுதி கிரியை நிறைவடைந்த பின்னர் காவல்துறைக்கு அநேமதய தொலைப்பேசி அழைப்பொன்று வந்துள்ளது.
அதில் தாயின் மூத்த மாகனால் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வீரகெட்டிய - ஹக்குருவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, தானே அந்த கொலையை செய்துள்ளதாக அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
No comments