Breaking News

இலங்கையில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள சம்பவம்...!!

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D...%21%21
திக்ஹோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஜனத் புதா 2 என்ற மீனவ படகில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திக்ஹோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட குறித்த மீன்பிடி படகு ஹிக்கடுவைக்கு சுமார் 51 கிலோமீற்றர் தூரத்தில் வைத்து தீப்பற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி அமைச்சினால் வழங்கப்பட்ட ஜனத் புதா 1 மற்றும் ஜனத்புதா 2 என்ற குறித்த மீன்பிடி படகுகள் இன்றைய தினம் வெள்ளோட்டம் விடப்பட்டன.

இந்நிலையில், ஜனத்புதா 2 என்ற மீன்பிடி படகில் தீ விபத்த ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த படகில் பயணித்தவர்கள் ஜனத்புதா 1 என்ற மீன்பிடி படகிற்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 60 அடி நீளம் கொண்ட குறித்த படகு 3 கோடி ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த படகில் 15 ஆயிரம் லீட்டர் எரிபொருள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Taken From - http://www.hirunews.lk/tamil/

No comments