Breaking News

வேகமாக பகிருங்கள் ஹெட்போன் பாவிப்பவரா நீங்கள் அப்படியாயின் இதை பொறுமையாக வாசியுங்கள்

 

சினிமாப் பாடல்களைக் கேட்பதற்கு மிகவும் அரிதானதாக காலம் ஒன்று இருந்தது. திருவிழாக்களில் மைக் கட்டி பாடல்கள் போடும் போதுதான் நமக்கு இஷ்டமான பாடல்களை கேட்போம். எம்பி3 பாடல்களின் வருகை எல்லாவற்றையும் மாற்றியது. பின்னர் செல்போன்களின் வருகையால் ஆயிரம் பாடல்களைக் கூட வைத்து கேட்கும் நிலை உருவாகிவிட்டது.


இயர்போன்களின் பயன்பாடு இன்னும் கூடும் வரப்பிரசாதமாக இருந்தது. இன்று சாலையில் பலரும் இயர் போனில் பாடல்களைக் கேட்டபடிதான் செல்கிறார்கள். வண்டியில் செல்லும் போது இயர்போனில் பாடல்களை கேட்டுச் செல்கிறார்கள். அந்த அளவிற்கு இயர்போனில் பயன்பாடு இன்றியமையாததாகிவிட்டது.

ஆனால், நாம் பயன்படுத்தும் இயர்போன்களே நமக்கு அபாயமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிக சத்தம் வைத்து பாடல்கள் கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும் என்பதை பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, உலக சுகாதார நிறுவனம் மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.


உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பற்ற இயர்போன்களை பயன்படுத்தியதால் 110 கோடி இளைஞர்களின் செவித்திறன் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 1235 வயதுக்குட்பட்டவர்களுக்குதான் பாதிப்பு அதிகம். இது 2015ஆம் ஆண்டு வெளியான அறிக்கை. அதிக வசத்தம் வைத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் இயர் போனில் பாடல்கள் கேட்டால் செவித்திறன் பாதியளவு குறைவதை உணர முடியும்.


பிரச்சினை இசையை கேட்பதிலோ அல்லது இயர்போனிலோ இல்லை. அதிக சத்தம் வைத்து பாடல்களை கேட்பதுதான் பிரச்சினையாக உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 85 டெசிபல் அளவிற்கும், 15 நிமிடங்களுக்கு 100 டெசிபல்ஸ் அளவிற்கு இசையை கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும். தற்போது சந்தையில் கிடைக்கக் கூடிய இயர்போன்கள் அனைத்தும் 120 டெசிபல் கொண்டவை.


இன்று தெருவோரங்களில் கூட 100 அல்லது 200 ரூபாய்க்கு கூட இயர் போன் கிடைக்கிறது. சிறிய கடைகளில் குறைந்தது 300 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், தரமானவையாக அவை இருக்கின்றதா என்பது யாருக்கு தெரியும். பிராண்டட் நிறுவனங்களின் இயர் போன்களே அதிக சத்தம் வைத்து கேட்க கூடாது என்றுதான் எச்சரிக்கப்படுகிறது. அப்படி இருக்க இயர் போன் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை நாம் புறக்கணித்து விட முடியாது.

No comments